திருப்பத்தூர்: அண்ணா சிலையின் காதில் ரகசியம் பேசி முத்தமிட்ட போதை ஆசாமி!

சிலையின் அருகே சென்ற அவர், அண்ணாவிடம் ஏதோ முக்கியமான ரகசியத்தைக் கூறுவது போல் சிலையின் காதருகே சென்று கிசுகிசுத்தார்.
திருப்பத்தூர்: அண்ணா சிலையின் காதில் ரகசியம் பேசி முத்தமிட்ட போதை ஆசாமி!
சிலைக்கு முத்தமிட்ட போதை ஆசாமி
Published on: 

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், பேரறிஞர் அண்ணாவின் சிலையிடம் ரகசியம் பேசிவிட்டு கன்னத்தில் முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீடத்தின் மீது ஏறிய போதை ஆசாமி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் சிவகங்கை செல்லும் சாலையில் பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அப்பகுதிக்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர், திடீரென அண்ணா சிலை அமைந்துள்ள பீடத்தின் மீது ஏறினார்.

காதில் கிசுகிசுத்து முத்தம்

சிலையின் அருகே சென்ற அவர், அண்ணாவிடம் ஏதோ முக்கியமான ரகசியத்தைக் கூறுவது போல் சிலையின் காதருகே சென்று கிசுகிசுத்தார். பின்னர், மிகுந்த பாசத்துடன் சிலையின் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.

இணையத்தில் வைரல்

அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இந்த விநோத செயலைத் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். "அண்ணா சிலையிடம் அப்படி என்ன ரகசியம் சொன்னார்?" என்ற கேள்வியுடன் இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு, நெட்டிசன்களிடையே நகைச்சுவையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

X