திருப்பத்தூர்: ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டைகள் கடத்திய வாலிபர் கைது

காரில் இருந்த 8 செம்மரக்கட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
திருப்பத்தூர்: ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டைகள் கடத்திய வாலிபர் கைது
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாக ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட வாணியம்பாடி நகர காவல் துறையினர், வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் ஒரு காரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அந்த காரில் 8 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த ஜமுனமரத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 8 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com