அதிமுகவில் இருந்து திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நீக்கம்: கட்சித் தலைமை நடவடிக்கை

அதிமுகவில் இருந்து தையூர் எஸ்.குமரவேல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தையூர் எஸ்.குமரவேல், (திருப்போரூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து இவர் நீக்கப்பட்டுள்ளதால், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக பணிகளை தொய்வின்றி தொடர, இடைக்கால பொறுப்பாளர் அல்லது புதிய ஒன்றிய செயலாளர் குறித்த அறிவிப்பை கட்சியின் தலைமை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com