திருப்பத்தூர்: சருகுமான் வேட்டையாடிய 2 பேர் கைது, நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

திருப்பத்தூர் வனக்கோட்டத்தில் ஜவ்வாது காப்புக்காடு பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.
திருப்பத்தூர்:  சருகுமான் வேட்டையாடிய 2 பேர் கைது, நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் காப்புக்காடு பகுதியில் சருகுமானை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டு, நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் வெளியிட்டு உள்ள செய்தியில், திருப்பத்தூர் வனக்கோட்டம் சிங்காரப்பேட்டை வனச்சரகம், சிங்காரப்பேட்டை பிரிவு ஆனந்தவாடி பீட் இன்னர் ஜவ்வாது காப்புக்காடு பகுதியில் இன்று (02.08.2026) அதிகாலை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இரண்டு நபர்கள் காப்புக்காடு பகுதியில் அத்துமீறி நுழைந்து, இரண்டு நாட்டு துப்பாக்கி எடுத்து சென்று வன உயிரினமான இந்திய சருகுமான் ஒன்றை வேட்டையாடி எடுத்து வந்த வனக்குற்றம் கண்டுபிடித்து மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டு எதிரி 1 சங்கர் த/பெ சாமிநாதன் (வயது 37), எதிரி 2 சங்கர் த/பெ கோவிந்தசாமி (வயது 55) மற்றும் இறந்த நிலையிலுள்ள சருகுமான் ஒன்று, இரண்டு நாட்டு துப்பாக்கிகள் ஆகியவற்றை சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து 1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி WLOR No:03/2026 நாள்:02.08.2026 பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விரிவான அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com