

திருப்பூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து ஊட்டி நோக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, பழுதாகி நின்ற கேஸ் டேங்கர் லாரியின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 5 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.