திருப்பூர்: பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பதிவிட்ட 6 பேர் கைது

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்: பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பதிவிட்ட 6 பேர் கைது
Published on

திருப்பூர்,

திருப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

போலி ஆதார் கார்டுகளை பயன்படுத்தி தங்கியிருந்த 6 பேரிடம் இருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 6 பேருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டது மட்டுமின்றி, உளவு பார்த்து பயங்கரவாதிகளுக்கு தகவல் தெரிவித்தும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com