

பல்லடம்,
பொள்ளாச்சியில் இருந்து இளநீர் லோடு ஏற்றிக் கொண்டு திருப்பூரை நோக்கி சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ளே வெங்கிட்டாபுரம் அருகே வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமடைந்து உள்ளார். பின்னர் இதுகுறித்து அறிந்த பல்லடம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த டிரைவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.