திருப்பூர்: கஞ்சா சாக்லெட்டுடன் பீகார் வாலிபர் கைது

ஒடிசாவில் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
பீகார் வாலிபர் கைது
Published on

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு கலைக்கல்லூரி பின்புறம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.

வாலிபர் கைது

அப்போது அவரிடம் கஞ்சா, கஞ்சா சாக்லெட் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் பீகாரைச் சேர்ந்த கஜேந்திரகுமார் (வயது 26), என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் 1கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com