திருப்பூர் குமரன் பிறந்ததினம் - நயினார் நாகேந்திரன் புகழாரம்

திருப்பூர் குமரன், “கொடிகாத்த குமரன்” என்று போற்றப்படுகிறார்.
திருப்பூர் குமரன் பிறந்ததினம் - நயினார் நாகேந்திரன் புகழாரம்
Published on: 

சென்னை,

திருப்பூர் குமரன் பிறந்ததினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் குமரன் பிறந்த தினம்

தாயின் மணிக்கொடியை காக்க, ஆங்கிலேய கொடுங்கோன்மைக்கு எதிராக அஞ்சாது போராடி, நாட்டின் விடுதலைக்காக இன்னுயிர் நீத்த வீரத் தியாகி திருப்பூர் குமரனின் பிறந்த தினம் இன்று. தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது இளமை வாழ்வையே அர்ப்பணித்த அவரது தியாகம், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் என்றும் அழியாத நினைவாக நிலைத்திருக்கிறது.

கொடிகாத்த குமரன்

ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தபடியே வீர மரணம் அடைந்த திருப்பூர் குமரன், “கொடிகாத்த குமரன்” என்று போற்றப்படுகிறார். தேசப்பற்று, துணிவு, தியாகம் ஆகியவற்றின் திருவுருவமாகத் திகழும் அவரது வீர வரலாறு, இன்றைய தலைமுறைக்கும் நாட்டுப்பற்றின் உயர்ந்த பாடமாக விளங்குகிறது.

வீரத் தியாகி திருப்பூர் குமரனின் பிறந்த தினத்தில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம். தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கி, வலிமையான பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com