திருப்பூர்: கர்ப்பிணிக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் போலீஸ்


திருப்பூர்: கர்ப்பிணிக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் போலீஸ்
x
தினத்தந்தி 16 Aug 2025 4:28 PM IST (Updated: 16 Aug 2025 4:33 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் வான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

திருப்பூர்

சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் 15-வேலம்பாளையம் காவால் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகண்பூண்டி ரிங் ரோடு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவில் பெண் கதறி அழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்ற இளம்பெண் பிரசவ வலியால் துடித்ததும், அவரது கணவர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் தெரியவந்தது.

மேலும், பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில் அவர் கதறி துடித்துள்ளார். அப்போது, பணியில் இருந்த பெண் போலீஸ் கோகிலா கர்ப்பிணி பாரதிக்கு ஆட்டோவில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளார். போலீஸ் பணியில் சேர்வதற்குமுன் நர்சிங் படித்து மருத்துவமனையில் பணியாற்றிய கோகிலா அந்த அனுபவத்தை வைத்து பாரதிக்கு பிரசவம் பார்த்தார். இதில் வடமாநில பெண் கோகிலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பாரதி மற்றும் குழந்தையை திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாய், சேயின் உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ் கோகிலாவுக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர், போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

1 More update

Next Story