திருப்பூர்: பள்ளியில் மரம் முறிந்து விழுந்து மாணவன் பலி


திருப்பூர்: பள்ளியில் மரம் முறிந்து விழுந்து மாணவன் பலி
x

கோப்புப்படம் 

பள்ளியில் மரம் முறிந்து விழுந்ததில் 11-ம் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அட்சயன் (15 வயது). இவர் சிவன்மலை அருகே உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் 3.45 மணியளவில் மாணவன் அட்சயன் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மரத்திலிருந்த கிளை ஒன்று முறிந்து மாணவன் மீது விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவனை, ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story