திருப்பூர்: அமராவதி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு

இன்று முதல் 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
திருப்பூர்: அமராவதி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, ஆற்று மதகு வழியாக, திருப்பூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் 15.07.2026 முதல் 21.07.2026 முடிய 6 நாட்களுக்கு 414.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com