திருப்பூர்: சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவர் கைது

ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்: சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவர் கைது
Published on

திருப்பூர்,

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 68). இவர், திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில், கோவிந்தராஜ், அந்தப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஆட்டோவுக்குள் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com