திருப்பூர்: வேன் மீது லாரி மோதி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: வேன் மீது லாரி மோதி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

காங்கேயம் அருகே லாரி மோதி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Published on

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வாலிபனங்காடு பகுதியில் லாரி மோதி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்துடன் கொடுமுடியில் திதி கொடுத்து விட்டு வீடு திரும்பியபோது விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com