திருப்பூர்: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
Published on

திருப்பூர்,

ஒடிசா மாநிலம் சியாம்சுந்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருப்பூர் வந்து கல்லாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். இளம்பெண்ணுடன் ஒடிசா மாநிலம் பத்ரக் பகுதியைச் சேர்ந்தவர் மில்லு (வயது 22) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மில்லு கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் மீண்டும் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீற லில் ஈடுபட முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com