திருப்பூர்: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

போலீசார் போக்சோ சட்டத்தில் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி வஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் அரசன் (வயது 19). இவர் 17 வயது சிறுமியுடன் பழகி, அவருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானாள்.

தங்களது மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர், அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் கே.வி.ஆர். நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com