திருவள்ளூர்: பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து

இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்: பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து
Published on

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சென்னீர்குப்பத்தில் தனியார் பெயிண்ட் கடை உள்ளது. இந்த பெயிண்ட் கடை குரோனாகவும் செயல்பட்டு வந்தது. இந்த பெயிண்ட் கடை அருகே மேலும் சில கடைகளும் உள்ளன.

இதனிடையே, இந்த பெயிண்ட் கடையில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பெயிண்ட் கடை முழுவதும் பரவியது. தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்நிலையில், பெயிண்ட் கடையில் இன்று காலை மீண்டும் தீப்பற்றியுள்ளது. தீ மீண்டும் மளமளவென கடை முழுவதும் பரவியது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com