திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - கலெக்டர் தகவல்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயாராக இருப்பதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - கலெக்டர் தகவல்
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய 133 பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய 64 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

சுமார் 4 ஆயிரத்து 338 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 400 தன்னார்வலர்களுக்கு ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையின் பயிற்சி பெற்ற 50 அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பாதுகாப்பு மையங்கள் வைரவன் குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், திருப்பாலைவனம், ஆண்டார் மடம், பள்ளிபாளையம், எளாவூர், மெதிபாளையம் ஆகிய 5 இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. 660 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளது.

சுகாதாரத்துறை வாயிலாக 42 மருத்துவ குழுக்கள் மற்றும் அரசு, தனியார் ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அரசினால் அறிவிக்கப்படும் வெள்ளம் மற்றும் புயல் தொடர்பான முன்னேச்சரிக்கை செய்திகளை அறிந்து அதன்படி செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் பெருமழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com