திருவள்ளூர்: அரசு பள்ளியில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர்: அரசு பள்ளியில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியையாக லதா என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பள்ளியில் தலைமை ஆசிரியை லதா இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டு வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 230 மாணவர்கள் மட்டுமே படிக்கக்கூடிய நிலையில், 550 மாணவர்கள் படிப்பதாக வருகை பதிவேட்டை திருத்தி லதா மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி, கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கூடுதலாக சத்துணவு பொருட்களையும் தலைமை ஆசிரியை லதா பெற்றுள்ளார். இதன் மூலம் அரசுக்கு அவர் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பள்ளியில் முறைகேட்டியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை லதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமை ஆசிரியையின் முறைகேடுகளை கவனிக்காத வட்டார கல்வி அலுவலர் மேரி ஜோசப்பையும் சஸ்பெண்ட் செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த முறைகேட்டை தொடர்ந்து, அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள், அடுத்து வரக்கூடிய நாட்களில் தீவிரமாக நடைபெறும் எனவும் தொடக்கக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com