

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை - ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அர்னாப் புயல் காரணமாக, நரசாப்பூர் - திருவண்ணாமலை சிறப்பு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இணைப்பு ரெயில் திருவண்ணாமலைக்கு வந்து சேராததால், திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் நரசாப்பூருக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை (அக். 29) காலை 11 மணிக்குத் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில் எண் 17292 திருவண்ணாமலை - நரசாப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இணைப்பு ரெயில் வந்து சேராததே இந்த ரத்து நடவடிக்கைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.