திருவண்ணாமலை: கார் மோதி மூதாட்டி பலி... அதிர்ச்சி வீடியோ


திருவண்ணாமலை: கார் மோதி மூதாட்டி பலி... அதிர்ச்சி வீடியோ
x

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில் ராஜாமணி தூக்கி வீசப்பட்டார். பின்னர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் டிரைவர் அப்துல் சலாமை கைது செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் பதைபதைக்க வைக்கும் இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

1 More update

Next Story