திருவண்ணாமலை: நிலத்தகராறில் முன்விரோதம்... வீடு புகுந்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு

மாதவன் என்பவருக்கும் சேகருக்கும் நிலத்தகராறில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
திருவண்ணாமலை ஆரணி அருகே மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி வசந்தம்மாள், இவர்களுக்கு குமரேசன், லோகேஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருக்கும், இவர்களுக்கும் நிலத்தகராறில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இது சம்பந்தமாக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் சேகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. சேகர் அந்த நிலத்தில் இருக்கக்கூடிய மரம் செடிக்கொடிகளை அகற்ற வேலை ஆட்களுடன் சென்றபோது. சேகருக்கும் மாதவனுக்கும் மீண்டும் பிரச்சினை எழுந்தது.
இந்த நிலையில் சேகரின் வீட்டுக்குள் சுமார் 8 பேர் கொண்ட கும்பல் நுழைந்து சேகர், வசந்தம்மாள், குமரேசன், லோகேஸ் ஆகியோரை தாக்கினர். இந்த தாக்குதலில் 4 பேருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சேகருக்கும் குமரேசனுக்கும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்து தற்போது ஆரணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மாதவன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர்.






