திருவண்ணாமலை: கொழுந்துவிட்டு எரியும் ஜவ்வாது மலை... தீயில் கருகிய அரிய வகை மூலிகைகள்

ஜவ்வாது மலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைகள் தீயில் கருகி நாசமாகின.
திருவண்ணாமலை: கொழுந்துவிட்டு எரியும் ஜவ்வாது மலை... தீயில் கருகிய அரிய வகை மூலிகைகள்
Published on

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர் பகுதியில் 205 மலை கிராமங்கள் உள்ளன. ஜவ்வாது மலை அமைந்துள்ள பகுதி மிக நீண்ட கிழக்கு தொடர்ச்சி வனப்பகுதி ஆகும்.

இந்த கிழக்கு தொடர்ச்சி வனப்பகுதியில் யானை, கரடி, மான், காட்டெருமை மற்றும் அரிய வகை பாம்புகள் , அரிய வகை பறவைகள் அதிகளவில் உயிர்வாழ்ந்து வருகின்றன. மேலும் அங்கு அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் உள்ளன.

இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அதிகளவு கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகின.

இந்த காட்டுத்தீயால் வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com