திருவண்ணாமலை: 3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி எரித்துக் கொலை

3 சென்ட் இடத்திற்காக மூதாட்டியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் 3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி ஒருவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீயில் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் விருதாம்பாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதில் மூதாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது எல்லப்பன் என தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story