திருவண்ணாமலை: இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்கம் - ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள்...!

கலசப்பாக்கத்தில் இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் நஞ்சு இல்லாத உணவுப் பொருட்களை வாங்கி சென்றனர்.
திருவண்ணாமலை: இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்கம் - ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள்...!
Published on

கலசப்பாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதி சேர்ந்த இயற்கை விவசாயிகளின் தங்கள் நிலத்தில் ரசாயனம் கலப்படம் இல்லாமல் பூச்சி கொல்லி மருந்து இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்ததற்கான வார சந்தை கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மைதானத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

இவை ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகின்றன. இதனால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் நஞ்சு இல்லாத உணவுப் பொருட்களை வாங்க ஆர்வத்துடன் சந்தைக்கு நேரில் சென்று காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி வகைகளை வாங்கிச் சென்றனர். இதனால் இயற்கை விவசாயிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com