திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது

திரும்ப பயன்படுத்த முடியாத அளவிற்கு வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதால் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில்  வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் ஏஜெண்ட் ஒருவர் உடைத்ததாக சொல்லப்படுகிறது.

திரும்ப பயன்படுத்த முடியாத அளவிற்கு வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதால் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதையடுத்து சுயேச்சை வேட்பாளர் வெங்கடேசன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியரும், சம்பவ இடத்திற்கு சென்றிருக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com