திருவண்ணாமலை: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்

பள்ளிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் பள்ளி குழந்தைகளின் நலன் மற்றும் பெண்களின் நலன் கருதி போராட்டம் நடைபெற்றது
பெண்கள் போராட்டம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணகிளிகொட்டம் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையை அகற்ற போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணக்கிளிகொட்டம் சாலையில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து டாஸ்மாக் கடையை நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டாஸ்மாக் கடையை சுற்றி 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்களிடம் மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பெரும் அச்சத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

3 முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதால் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றவில்லை என்றால் கடையின் முன்பு “தீக்குளித்து உயிரிழப்போம்” என பெண்கள் எச்சரித்துள்ளனர். இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com