தேசூர் அருகே கொக்கு சுட முயன்றவர் படுகாயம்.. உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸ்

காயமடைந்த நபர் பயன்படுத்திய உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேசூர் அருகே கொக்கு சுட முயன்றவர் படுகாயம்.. உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸ்
Published on

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள பருவதம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). விவசாயியான இவர், சம்பவத்தன்று கொக்கை சுட முயன்றபோது துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா எதிர்பாராதவிதமாக அவரது தொடையில் பாய்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com