என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து த.மா.கா. விலகல்; த.வெ.க. கூட்டணி பற்றியும் பேசிய ஜி.கே. வாசன்

உள்ளாட்சி தேர்தலில் தனித்து செயல்பட நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர் என்றார்.
என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து த.மா.கா. விலகல்; த.வெ.க. கூட்டணி பற்றியும் பேசிய ஜி.கே. வாசன்
Published on

சென்னை

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ.) ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.கா.வும் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், அந்த கூட்டணியில் இருந்து விலகும் முடிவை த.மா.கா. எடுத்துள்ளது.

எதிர்பார்க்காத தேர்தல் முடிவு

இதுபற்றி ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, தமிழக சட்டசபை தேர்தலில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்பார்க்காத தேர்தல் முடிவு வந்துள்ளது. கடந்த சில தேர்தல்களில் எங்களுடைய கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆனபோதும் இலக்கை அடைய முடியவில்லை.

உள்ளாட்சி தேர்தல்

நாங்கள் தேர்தலின்போது, என்.டி.ஏ. கூட்டணியில்தான் பணியாற்றினோம். கூட்டணியில்தான் தோல்வியடைந்தோம் என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலில் தனித்து செயல்பட நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்.

என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து த.மா.கா. வெளியேறியுள்ளது என்றார். எனினும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு நட்பு சக்தியாக செயல்படுவோம். என்.டி.ஏ. கூட்டணியில் நட்பு சக்தியாக தொடரும். எங்களுடன் கூட்டணியில் அங்கம் வகித்த அனைவருக்கும் நன்றி.

த.வெ.க. கூட்டணி

ஆனால், த.மா.கா. தனது தனித்தன்மையை இழக்க விரும்பவில்லை என்று கூறினார். த.வெ.க. கூட்டணியை பற்றி குறிப்பிட்டு பேசிய அவர், த.வெ.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருப்பது சந்தர்ப்பவாத அரசியல். த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com