தொகுதி மறுவரையறை; த.வெ.க.வின் நிலைப்பாடு என்னவென தெளிவாக கூறவில்லை: தி.மு.க. செய்தி தொடர்பாளர் பேட்டி

முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகியவை பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன.
தொகுதி மறுவரையறை; த.வெ.க.வின் நிலைப்பாடு என்னவென தெளிவாக கூறவில்லை:  தி.மு.க. செய்தி தொடர்பாளர் பேட்டி
Published on

சென்னை

தொகுதி மறுவரையறையில் த.வெ.க.வின் நிலைப்பாடு என்னவென தெளிவாக கூறவில்லை என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் பேட்டியளித்து உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிக்கிறது என தகவல்கள் வெளி​யாகி​ இருந்தன.

தமிழக எம்​.பி.க்​கள் கூட்டம்

இந்த சூழலில், தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான அனைத்​து கட்​சிகளின் எம்​.பி.க்​கள் கலந்​தாய்​வு கூட்​டம் முதல்​-அமைச்சர் விஜய் தலை​மை​யில் சென்​னை​யில் இன்று நடை​பெறுகிறது. இதுகுறித்து விவா​திப்​ப​தற்​காக தமிழக எம்​.பி.க்​கள் ஆலோ​சனை கூட்​டத்​துக்கு முதல்​-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்​திருந்தார்.

இந்த கலந்தாய்வு கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்கு முதல்​-அமைச்சர் விஜய் தலைமை வகிப்​பார். இதற்​கான அழைப்​பிதழ் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​தின் மூலம் அனைத்து மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை உறுப்​பினர்​களுக்கும் அனுப்​பப்​பட்டு இருந்தது.

தி.மு.க.-அ.தி.மு.க. புறக்கணிப்பு

எனினும், இந்த கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகியவை பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன. அ.தி.மு.க.வும் கூட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான அனைத்​து கட்​சிகளின் எம்​.பி.க்​கள் கூட்ட புறக்கணிப்பு பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் இன்று பேட்டி அளித்துள்ளார்.

த.வெ.க. நிலைப்பாடு

அவர் கூறும்போது, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அவர்களுடைய நிலைப்பாடு என்னவென்று தெளிவாக கூறவில்லை. தொகுதி மறுவரையறையில் த.வெ.க.வின் நிலைப்பாடு என்ன என்பதே? எங்களுடைய கேள்வி. அதனை அவர்கள் தெளிவுப்படுத்தவில்லை.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் த.வெ.க.வின் பார்வை என்ன? இந்த கூட்டத்தின் செயல்பாட்டு திட்டம் என்ன? எதனையும் அவர்கள் கூறவில்லை.

மசோதா தோற்கடிப்பு

இந்த விவகாரம் பற்றி நாங்கள் ஆலோசிக்க போகிறோம் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும். எங்களிடம் அவர்கள் எதுவும் கூறவில்லை. தொகுதி மறுவரையறை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அதுபற்றி தெரியாமல் நாங்கள் எப்படி கூட்டத்தில் பங்கேற்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதனை நாங்கள் எதிர்த்தோம். அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. அதன் மீதுள்ள எங்களுடைய பார்வையை நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com