த.ம.மு.க. ரத்ததானம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் த.ம.மு.க. ரத்ததானம் செய்தனர்.
த.ம.மு.க. ரத்ததானம்
Published on

நெல்லை:

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட த.ம.மு.க. சார்பில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கினார். மாநகர இளைஞரணி தலைவர் மணிமாறன், செயலாளர் முத்துபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 25-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இதில் த.ம.மு.க. மாநகர செயலாளர் துரைபாண்டியன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், மகளிரணி சர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com