பா.ஜ.க. கூட்டணியில் இருந்து த.ம.மு.க. விலகல்

த.மா.கா. வெளியேறிய நிலையில், தற்போது மேலும் ஒரு கட்சி வெளியேறியிருக்கிறது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன்
Published on

சென்னை,

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டு, தொகுதிகள் பிரிக்கப்பட்டு தேர்தலை சந்தித்தது.

ராஜபாளையம் தொகுதி

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெற்றிருந்தது. அந்தக் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா வேட்பாளராக போட்டிட்டார். ஆனாலும், தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

வெளியேறுவதாக தெரிவித்தார்

இந்த நிலையில், இன்று நெல்லையில் பேட்டியளித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறுவதாக தெரிவித்தார். ஏற்கனவே, த.மா.கா. வெளியேறிய நிலையில், தற்போது மேலும் ஒரு கட்சி வெளியேறியிருக்கிறது.

ஜான் பாண்டியன் தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com