#லைவ் அப்டேட்ஸ்: தமிழக வேளாண் பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்றுவேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
#லைவ் அப்டேட்ஸ்: தமிழக வேளாண் பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்
Published on

11:05 AM

வேளாண் துறையிலும், மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும்

விதை முதல் விளைச்சல் வரை மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்

ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம்

கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை.

சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு

- வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:50 AM

மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு

ரூ.12 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்

எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு

- வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:40

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு

வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு

- வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:35

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு

நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு

- வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:30

மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு.

60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

3,204 கிராம ஊராட்சிகளில் ரூ.300 கோடி மாநில அரசின் நிதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்

இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக நம்மாழ்வார் இயற்கை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2020-2021ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9.26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,055 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

- வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:15 AM

கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 86 அறிவிப்புகளில், 80 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியயிடப்பட்டு உள்ளது.

நெல் சாகுபடி 2021-22ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உயர்மட்ட குழு மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.

- வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:10 AM

விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் வேளாண் பட்ஜெட்.

உழவர் தொழிலே உலகில் உயர்ந்தது என உணர்த்தும் வகையில் பட்ஜெட்டை முன் வைப்பதில் பெருமைகொள்கிறேன்- வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:00 AM

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பச்சை நிறத் துண்டு அணிந்து சட்டமன்றம் வருகை தந்து உள்ளனர்.

தமிழக சட்டசபையில் 2வது முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com