

சென்னை,
தமிழக சட்டசபை நாளை (புதன்கிழமை) கூடுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்திலேயே இந்த சட்டசபை கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. எனவே, இந்த சட்டசபை கூட்டத் தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.