“விஜய்க்கு டான்ஸ் ஆடத்தான் தெரியும்” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யை விமர்சித்து பேசினார்.
“விஜய்க்கு டான்ஸ் ஆடத்தான் தெரியும்” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
Published on

சென்னை,

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகரும் தவெக (தமிழக வெற்றி கழகம்) தலைவருமான விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு டான்ஸ் ஆடத் தெரியும், ஒரு கட்சியின் தலைவராக செயல்படுவது குறித்து ஒன்றும் தெரியாது என அவர் கூறியுள்ளார்.

தவெக கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க விழா பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பனையூர் வந்த தவெக தலைவர் விஜய்யை, கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, பனையூர் அலுவலகத்தில் தவெக கட்சியின் கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி அலுவலகத்தில் தவெக கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, பாடகர் வேல்முருகன் இசை நிகழ்ச்சியில் விஜய் உற்சாகமாக நடனமாடினார்.

Also Read
அரங்கம் அதிர.. விசில் பறக்கவே.. மேடையில் நடனமாடிய விஜய்!
“விஜய்க்கு டான்ஸ் ஆடத்தான் தெரியும்” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யை விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:

“தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். இன்று 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர், தமிழகத்தின் கலாசாரம் என்ன என்பதே தெரியாமல் நடனமாடிக் கொண்டிருக்கிறார். டான்ஸ் ஆடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்,” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com