மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழகம்!

நாங்குநேரி எம்.எல்.ஏவாக உள்ள வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழகம்!
Published on

சென்னை,

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி 351 இடங்களில் ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துள்ள நிலையில், தமிழகத்தில் இந்த கூட்டணி ஒரே ஒரு தொகுதி மட்டுமே வென்றுள்ளது.

தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வென்றுள்ளது. நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவான வசந்தகுமார், தற்போது எம்.பி.யாக தேர்வாகி உள்ளதால் விரைவில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார்.தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வசந்தகுமார் வெற்றி பெற்றிருந்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் களமிறக்கப்பட்டார் . நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை வசந்தகுமார் தோற்கடித்தார்.

தற்போது எம்.பியாக தேர்வாகி உள்ளதால் விரைவில் தனது நாங்குநேரி எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்வார். அதனைத்தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனினும், நேற்று எண்ணப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகளில் அதிமுக 9 இடங்களில் வென்றுள்ளதால், ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இது அமையாது என்றே தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com