முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல்

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல்
Published on

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய தொழில் கொள்கைகள், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படது.

அதேபோல், தமிழக அரசின் திட்டங்கள் மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, சட்டசபையில் தரவுகளுடன் பதிலளிக்கும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com