

சென்னை,
சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.
சூரிய சக்தி கொள்கையின் கீழ் பம்பு செட்டுகளுக்கு 90% மானியம் வழங்கப்படும். ரூ.50 கோடியில் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 500 சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கப்படும். சிறுதானியங்களை அதிகளவில் பயிரிட மானியம் வழங்கப்படும். 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிட ரூ. 27.80 கோடி மானியம் வழங்கப்படும். கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பட்டயப்படிப்பு இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.