உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து
Published on

ரியோடிஜெனீரோ,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் தலைநகர் ரியோடிஜெனீரோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் , 251.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை இளவேனில் பெற்றார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை 20 வயதான இளவேனில் பெற்று இருக்கிறார். இளவேனில் கடலூரில் பிறந்தவர். தமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு 3 வயது இருக்கும்போது, அவரது குடும்பம் குஜராத்தில் உள்ள ஆமதாபாத்துக்கு இடம் பெயர்ந்து விட்டது. தற்போது அவர் அங்கு தான் வசித்து வருகிறார்.

தங்கம் வென்ற இளவேனிலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வளரிவான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com