மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
Published on

சென்னை,

கொரோனா தொற்று தமிழகத்திலும் பரவத் தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் 12 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. இடையிடையே பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

12-வது கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது வழக்கம்.

அந்த வகையில், முதலில் மாவட்ட கலெக்டர்கள் உடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எந்த அளவு குறைந்துள்ளது என்பதை விரிவாக கேட்டு அறிந்தார். அதைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com