

சென்னை,
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கூறுகையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுக்கான ரெயில்வே கட்டணம் உள்பட அனைத்து பயணச் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் நடைபயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.