தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 304 -பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 304 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 304 -பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில், 304 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று 304 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 78 பேர், செங்கல்பட்டில் 23 பேர் உள்பட 31 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

.மருத்துவமனையில் 297 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 570 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com