தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 33 பேர், செங்கல்பட்டில் 11 பேர் உள்பட 7 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 31 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.

13 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது. இந்த மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பும் இல்லை, சிகிச்சையிலும் ஒருவர் கூட இல்லை.72-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com