

சென்னை,
கொரோனா விதிமுறைகளான பொது இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொது சுகாதார சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது.
தமிழக அரசின் இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் கொடுத்துள்ளார். கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவோர் மீது தாக்குதல் நடத்துவது குற்றம் எனவும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.