

சென்னை
தமிழக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர்கள், பாதுகாவலர்கள் உள்பட சுமார் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.