அர்த்தநாரீஸ்வரர் கோவிலை ரூ.2.82 கோடியில் சீரமைக்க தமிழக அரசு டெண்டர் வெளியீடு

2024-ம் ஆண்டு டிசம்பரில் சீரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்த்தநாரீஸ்வரர் கோவிலை ரூ.2.82 கோடியில் சீரமைக்க தமிழக அரசு டெண்டர் வெளியீடு
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை ரூ.2.82 கோடியில் சீரமைக்க தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், வரும் 2024-ம் ஆண்டு டிசம்பரில் சீரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலம் குத்தகை தொகை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 45 ஏக்கர் நிலத்தின் குத்தகை தொகையை கோவிலுக்கு செலுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com