20 குழந்தைகள் உயிரிழப்பு: இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு


20 குழந்தைகள் உயிரிழப்பு: இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு
x
தினத்தந்தி 8 Oct 2025 4:50 PM IST (Updated: 8 Oct 2025 6:09 PM IST)
t-max-icont-min-icon

மருந்து நிறுவனத்தின் உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்தது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவன ஆலையில் இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனிடையே, இந்நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்ட ’கோல்ட்ரிப்’ என்ற இருமல் மருந்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இந்த இருமல் மருந்தை சாப்பிட்டு மத்தியபிரதேசத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருமல் மருந்தில் குழந்தைகளின் சிறுநீரகத்திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் கலந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மருந்து நிறுவனத்தின் உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், 20 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான கோல்ட் ரிப் இருமல் மருந்து தயாரித்த ஆலைக்கு தமிழக அரசு இன்று சீல் வைத்துள்ளது. சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் அந்த ஆலைக்கு தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அதேவேளை, குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த மத்தியபிரதேச அரசு சிறப்புக்குழு அமைத்துள்ளது. அந்த குழு விரைவில் சுங்குவார்சத்தில் உள்ள இருமல் மருந்து தயாரித்த அந்த ஆலைக்கு நேரில் வந்து விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story