ஊரக உள்ளாட்சி தேர்தல் ; சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம்

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் ; சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம்
Published on

மதுரை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. சென்னை மாவட்டம் சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்து இருப்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற் கான தேர்தல் நடந்தது. முதல் கட்ட தேர்தலின் போது 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாயின. 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

தமிழகத்தில் உள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. எனினும், ஒரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகியுள்ளது.

* தேர்தல் அலுவலர்கள் பணி ஒதுக்கீட்டில் குளறுபடியால் புதுக்கோட்டையில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகியுள்ளது.

* மதுரையில் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வராததால் தாமதம் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

* அதிகாரிகள் குளறுபடியால் ஆரணி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தாமதம்.

* செய்யாறு தபால் வாக்கு பெட்டியின் சாவி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தாமதம்

* திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை திறக்க முடியாததால் வாக்கு எண்ணிக்கை தாமதம்.

* பழனியில் முகவர்கள் வராததால், வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை முன்பு அதிகாரிகள் காத்திருப்பு

* திண்டுக்கல்லில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் - அதிகாரிகளிடம் திமுகவினர் முறையீடு

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com