

சென்னை,
மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;- மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.