'பிரதமர் தண்ணீருக்கு அடியில் தவம் செய்தாலும் தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஏற்க மாட்டார்கள்' - அமைச்சர் சேகர் பாபு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பா.ஜ.க.வுக்கு அங்கீகாரம் வழங்க மாட்டார்கள் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
'பிரதமர் தண்ணீருக்கு அடியில் தவம் செய்தாலும் தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஏற்க மாட்டார்கள்' - அமைச்சர் சேகர் பாபு
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருவது குறித்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"பிரதமர் மோடி தண்ணீருக்கு அடியில் சென்று தவம் செய்தாலும், தரை மீதோ அல்லது வான் மார்க்கமாகவோ பயணம் செய்தாலும், நடந்து வந்தாலும், ஓடி வந்தாலும், உருண்டு வந்தாலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பா.ஜ.க.வுக்கு அங்கீகாரம் வழங்க மாட்டார்கள்.

'இந்தியா' கூட்டணி வலிமையோடு இருக்கிறது. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் அஞ்சா நெஞ்சத்தோடு செயல்படுகிறார்."

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com